உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான்-குரோஷியா மற்றும் பிரேசில்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.  உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன.…

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான்-குரோஷியா மற்றும் பிரேசில்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். அதன்படி, 16 அணிகள் 2வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இதுவரை நெதர்லாந்து, அர்ஜெண்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2வது சுற்று போட்டியில் ஜப்பான் -குரேஷியா அணிகள் மோதுகின்றன. பின்னர் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பிரேசில்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.