இன்று காலை பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று (17.3.2023) காலை கிராமப்புற பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை தவிர இதர சங்கங்களில் வழக்கமான அளவிற்கு பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கினார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைச் செய்தி: பதுங்கியிருந்த சிங்கத்தை கிளவராக விரட்டிய யானை -வைரலாகும் வீடியோ
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ஆவின் மற்றும் பால்வளத்துறையின் கள அலுவலர்கள் சங்கங்களில் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பால் நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்யும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆவின் பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடந்து நடைபெறும் இதுகுறித்து வரும் வதந்திகளையும்,உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என்று கூறினர்.