இன்று இரவு வெளியாகிறது ‘கருப்பு’ டிரெய்லர்…!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு வெளியாகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து இதுவரை ‘காட் மோட்’, ’ராத்து ராசன்’, ‘நாங்க நாளு பேரு’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இம்மாதம் 14 ஆம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் கருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.