கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 13,776
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,22,900 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 13,776 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 10,37,711 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 78
பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 13,395 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சை பெற்றுக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,078 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 95,048 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 3,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 37 பேர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 31,170 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டில் 985 பேருக்கும் கோவையில் 889 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







