வரலாற்றில் முதல்முறையாக இந்திய பெண்கள் அணியினர் போலாந்து நாட்டில் நடைபெற்ற AIBA இளம் ஆடவர் மற்றும் மகளிர் உலக குத்துச்சண்டை சேம்பியன்ஷிப் போட்டியில் 7 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
போலாந்து நாட்டின் கீல்ஸ் மாநகரில் நடப்பாண்டிற்கான AIBA யூத் மென் அண்டு விமென் வேர்ல்டு பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியினர் 5 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் ரஷ்யா, பிரான்ஸ் போன்ற அணிகளுடன் மோதிய இந்திய குத்துச்சண்டை பெண்கள் அணியினர் 7 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தினர். அதில் கீதிகா (48 கிலோ), நோரம் பேபிரோஜிசனா சானு (51 கிலோ), பூனம் (57 கிலோ), விங்கா (60 கிலோ), அருந்ததி (69 கிலோ), சனமச்சா சானு (75 கிலோ), மற்றும் அல்ஃபியா பதன் (+81 கிலோ) உள்ளிட்ட வீராங்கனைகள் வெவ்வேறு எடை பிரிவின் கீழ் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர்.
இதுகுறித்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் கூறுகையில், “கொரோனா ஊரடங்கால் குத்துச்சண்டை வீரர்களின் பயிற்சி பெரிதளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் அனைத்துத் தடைகளையும் உடைத்து இப்போட்டியில் சாதனை புரிந்தது எனக்குப் பெறுமையாகவும் மிக்க மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.