முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் புதிதாக 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 715 ஆக தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,28,350 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 748 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,83,691 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,504 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 123 பேருக்கும் கோயம்புத்தூரில் 121 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெங்களூருவில் ‘ஒமைக்ரான்’ தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மேகதாது விவகாரம்: டெல்லி பயணம் ஓரளவு வெற்றி- துரைமுருகன்

Ezhilarasan

கூடுதல் கட்டணம்; ஆம்னிப் பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை, பேருந்துகளில் சோதனை

Halley Karthik

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கேரள பெண் உள்பட 33 பேர் பலி

Halley Karthik