முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“பல வகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா பல வகையான வேளாண் பொருட்களை இன்று ஏற்றுமதி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் 2014ம் ஆண்டிலிருந்து வேளாண்மைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டை ‘சிறுதானியங்களுக்கான ஆண்டாக’ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை இந்த அறிவிப்பை வெளியிட்டது. இன்று நடைபெற்ற ‘விவசாயம் மற்றும் கூட்டுறவு’ தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக விவசாய துறைக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மோடி 1.0 மற்றும் மோடி 2.0 என்ற இரண்டு பட்ஜெட்களும் விவசாயத்தை மையப்படுத்தி கொண்டு செல்லப்பட்டது. 2014ம் ஆண்டு வேளாண்மை துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 25,000 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தது. ஆனால், இன்று 1,25,000 கோடி ரூபாய் வேளாண்மை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்திய வேளாண்மை துறை நிலையில்லதாக இருந்து வந்தது. ஆனால், தற்போது வேளாண்மை துறையில் தன்னிறைவு பெற்றதுடன் ஏற்றுமதியையும் தற்போது செய்து வருகிறது. அரசின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு விவசாயிகள் உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தையை எளிதாக அனுக கூடியதாக உள்ளது.

அண்மைச் செய்தி:ஆரணி: தாடியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களை வெளியில் அனுப்பிய ஆசிரியர்

பிரதமர் பிரனாம் யோஜனா மற்றும் கோபர்தன் யோஜனா மூலம் மத்திய அரசு இயற்கை அரசு ஊக்குவித்து வருகிறது. தனியார் கண்டுபிடிப்பு மற்றும் முதலீடு வேளாண்மை துறைக்கு இன்றும் அரிதாக இருந்து வருகிறது. இதனால் வேளாண்மை துறையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது. அதனால்தான் இந்த பட்ஜெட்டில் இதுதொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெருங்கும் மாண்டஸ் புயல்: சென்னையில் நீடிக்கும் கனமழை

Web Editor

முறையூர் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மீன்பிடி திருவிழா

Web Editor

கின்னிமங்கலம் ஏகநாதர் கோயிலில் மத்திய, மாநில தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு

Jeba Arul Robinson