முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று 1,259 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,259 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 26,83,396 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 15,451 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,37,423 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,90,17,492 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதேபோல இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 719 பேர் ஆண்கள் மற்றும் 540 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,438 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 26,32,092 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 20 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 35,853 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 163பேரும், கோவையில் 143 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

Gayathri Venkatesan

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Halley karthi

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

Saravana