முக்கியச் செய்திகள் தமிழகம்

கங்கண சூரிய கிரகணம் இன்று தோன்றுகிறது!

சூரியனை சுற்றி நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கக்கூடிய, அரிய கங்கண சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரன், சூரியனை மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படுகிறது. பல அதிசயங்கள் நிறைந்திருக்கும் பேரண்டத்தில், ஒவ்வொரு முறை தோன்றும்போதும், நம்மை வியக்கவைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல் மூன்று சூரிய கிரகணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. சந்திரனால் சூரியனை முழுவதும் மறைக்க இயலாது.

எனவே சூரியனை சுற்றி நெருப்பு வளையம் இருப்பது போன்று காட்சியளிக்கக்கூடிய, கங்கண கிரகணம் இன்று நிகழ்கிறது. நாட்டில் இந்நிகழ்வை அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் காணமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய நேரப்படி கங்கண கிரகணம், நண்பகல் 1.42 மணிக்கு தொடங்கி, மாலை 6.41 மணிக்கு நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை; மத்திய அரசு விளக்கம்!

Saravana Kumar

சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர் குழு இன்று முடிவு!

Jayapriya

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Karthick