பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; தயாநிதி மாறன் வலியுறுத்தல்

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தயாநிதிமாறன், எம்பிக்களுக்கு வழங்கப்படும் நிதியை…

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தயாநிதிமாறன், எம்பிக்களுக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 4ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியதில், மற்ற போட்டியாளர் குறித்த விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஏழை மக்களின் துயரத்தை துடைப்பதாக கூறும் பிரதமர் ஏன் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 915 ரூபாயாக உயர்த்தியது குறித்தும் விமர்சனம் செய்தார். இதேபோன்று பெட்ரோல் டீசல் மீதான விலையை ஏன் குறைக்க முடியவில்லை எனவும் மக்கள் கேள்வி கேட்பதாகவும் தயாநிதி மாறன் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.