முக்கியச் செய்திகள் இந்தியா

கேஸ் சிலிண்டர் விலையுயர்வு; ராகுல் காந்தி கண்டனம்

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலையுயர்வை ராகுல் காந்தி சூசகமாக விமர்சித்துள்ளார்.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் திடீரென உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக 19கி.கி சிலிண்டர் விலை ரூ2,101 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக கடந்த 2012-2013 ஆண்டுகளில் 19கி.கி சிலிண்டர் ரூ.2,200ஆக விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை 2,000ஐ கடந்துள்ளது.

இந்த விலையுயர்வு குறித்து “விலைவாசி அதிகரித்துள்ளதால், வாக்குறுதிகளின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்னர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை குறிப்பிட்டே இந்த டிவிட்டை பதிவிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

19 கி.கி சிலிண்டர் விலை அதிகரித்தாலும், 14.2 கி.கி, 5 மற்றும் 10 கி.கி எடையுள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி, “பண வீக்கத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் எண்ணெய் மற்றும் காய்கறிகளின் விலைகள் விண்ணை முட்டியுள்ளன. பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த 2014ஐ விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.” என தொடர் விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சேலத்தில் அச்சுக்கலை வரலாற்று கண்காட்சி

EZHILARASAN D

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!

Gayathri Venkatesan

ஆத்மா திருமணம்; மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து!

Arivazhagan Chinnasamy