தடுப்பூசி போட்டுக்கொள்ள இரவு முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு!

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேற்று இரவு முதலே, சாலையோரத்தில் வட்டங்களை வரைந்து, துண்டு, செருப்பு மற்றும் கற்களை வரிசையில் வைத்து, காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே…

ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேற்று இரவு முதலே, சாலையோரத்தில் வட்டங்களை வரைந்து, துண்டு, செருப்பு மற்றும் கற்களை வரிசையில் வைத்து, காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து, தமிழ்நாட்டு அளவில் கோவை மாவட்டத்திற்கு அடுத்த இரண்டாமிடத்தைப் பிடித்தது. . இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக, நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் அட்டைகளுடன், தங்களது பெயர்களைப் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்தி செல்வது அதிகரித்து வருகிறது. இதனிடையே, இன்று காலை ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் திருநகர் காலனி அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் தலா 100 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வதற்காக, நேற்றிரவு முதலே வரிசையில் நிற்க தொடங்கினர். சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக, குறிப்பிட்ட இடைவெளியில் வட்டங்களை வரைந்து, அதற்குள் அடையாளத்திற்கு துண்டு, செருப்பு, மற்றும் கற்களை வைத்துவிட்டு, சாலையோரத்தில் விடியவிடிய காத்திருந்து, காலையில் தடுப்பூசி போட்டு சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.