வறுமையை ஒழிக்க நகர்ப்புற வேலைகள் அவசியம் ஏன்?

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இருக்கிறது. இந்தியாவில் வறுமை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கையும் இன்னும்…

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இருக்கிறது. இந்தியாவில் வறுமை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கையும் இன்னும் முற்றிலும் மறையவில்லை. ஏழைகள் ஏழைகளாகவும் பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக ஆவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதில் தனிநபர் பெறும் கல்வி, வேலை, வருமானம் ஆகியவை அடங்கி இருக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் மிக மோசமான வறுமை நிலையில் இருந்து சற்றே முன்னேறி வந்திருக்கிறோம்.

நமது தேசத்தில் நிலையற்ற வாழ்க்கையை பலர் வாழ்த்து கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் இந்த நிலையில் இருக்கும் மக்கள் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளியது. வளர்ச்சி அனைத்துத் தரப்பு மக்களையும் சரிசம விகிதத்தில் சென்று சேரவில்லை. கல்வி, வேலை, வாழ்வதற்குத் தேவையான சம்பளம் ஆகியவை தான் வறுமையை எதிர்த்து போராட இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. இந்தச் சூழ்நிலையில், அடிப்படை வருமானம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் தற்போதைய காலகட்டத்தின் தேவை என்று ஹரியானா மாநிலத்தின் குர்காவன் நகரில் செயல்பட்டு வரும் போட்டித்திறனுக்கான சிந்தனை அமைப்பு (IFC) தெரிவித்துள்ளது.
கல்வியும், வேலையும் நகரத்தில் இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான ஊரக இளைஞர்களின் மனதில் கனவாக இருக்கிறது. ஆனால், உண்மை நிலை வேறொன்றாக இருக்கிறது.

நகரங்களில் வேலையின்மை அதிகரிப்பு

அவர்களுக்கு நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும், நகரங்களில் வேலை கிடைப்பதில்லை. கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் தான் இளைஞர்கள் வேலையை அதிகம் தேடுகின்றனர். ஆய்வு ஒன்றில் நகரங்களில் தொடர்ந்து வேலை தேடுவதை விட, அந்த முயற்சியை கைவிடுவதையே பலரும் தேர்வு செய்தனர்.
2019-20 இல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கிராமங்களில் ஆண்கள் 56.3 சதவீதம் பேரும், பெண்கள் 24.7 சதவீதம் பேரும் பங்கேற்றனர். நகர்ப்புறங்களில் ஆண்கள் 57.8 சதவீதம் பேரும், பெண்கள் 18.5 பேரும் பங்கேற்றனர். ஒட்டுமொத்த இந்தியாவை சேர்த்தால், 56.8 சதவீத ஆண்களும், 22.8 சதவீத பெண்களும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். கிராமங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் மறுக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்பகுதிகளில் 4.5 சதவீத ஆண்களும், 2.6 சதவீத பெண்களும் வேலையில்லாமல் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் 6.4 சதவீத ஆண்களும், 8.9 சதவீத பெண்களும் வேலையில்லாமல் உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவில் 5.1 சதவீத ஆண்களும், 4.2 சதவீத பெண்களும் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிப்பவர்களின் சதவீதம் சுயதொழில் செய்பவர்கள் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர். ரூ.5000க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களில் 21.6 சதவீதம் பேர் மாதச் சம்பளதாரர்களாகவும், 1.8 சதவீதம் பேர் சாதாரண ஊழியர்களாகவும் இருக்கின்றனர். 76.6 சதவீதம் பேர் சுயதொழில் புரிபவர்களாக இருக்கின்றனர். ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை சம்பாதிப்பவர்களில் 14.3 சதவீதம் பேர் மாதச் சம்பளதாரர்களாகவும், 13.1 சதவீதம் பேர் சாதாரண ஊழியர்களாகவும், 72.6 சதவீதம் பேர் சுயதொழில் புரிபவர்களாகவும் உள்ளனர்.

மாதத்துக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பவர்களில் 26.4 சதவீதம் பேர் மாதச் சம்பளதாரர்களாகவும், 28.2 சதவீதம் பேர் சாதாரண தொழிலாளர்களாகவும், 45.4 சதவீதம் பேர் சுயதொழில் புரிபவர்களாகவும் உள்ளனர். மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களில் 41.6 சதவீதம் பேர் மாதச் சம்பளதாரர்களாகவும் 14.4 சதவீதம் பேர் சாதாரண தொழிலாளர்களாகவும், 44 சதவீதம் பேர் சுயதொழில் புரிபவர்களாகவும் உள்ளனர்.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்

நமது நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளையில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. அதை சதவீதத்தில் பார்ப்போம்.

பட்டப்படிப்பு முதல் பட்டமேற்படிப்பு படித்தவர்கள்  – 19 %
10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள்  – 10.3 %
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படித்தவர்கள்  –   1.5%
5ம் வகுப்பு வரை படித்தவர்கள்  –  0.7%

சர்வதேச நிதி கழகத்தின் (IFC) தரவு படி இந்த விவரம் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.