முக்கியச் செய்திகள் சினிமா

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இழப்பீட்டை செலுத்த இயலாது: நடிகை ஆம்பர்

நடிகர் ஜானி டெப் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், அவரது முன்னாள் மனைவி ஆம்பர், இழப்பீட்டுத் தொகையான ரூ.80 கோடியை அளிக்க முடியாது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆம்பரின் வழக்கறிஞரிடம் இழப்பீட்டுத் தொகை முழுவதையும் ஆம்பர் செலுத்துவாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “நிச்சயமாக இல்லை” என்று கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். 2015-ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹேர்ட்டை நடிகர் ஜானி டெப் திருமணம் செய்துகொண்டார். ஜானி தன்னை விட 25 வயது குறைவாக இருந்த ஆம்பர்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண உறவு 2 ஆண்டுகளே நீடித்தது. பின்னர், 2017-ம் ஆண்டு ஜானி டெப் – ஆம்பர் திருமண பந்தம் முறிந்தது. இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். அதேவேளை, 2019-ம் ஆண்டு பிரபல அமெரிக்க பத்திரிக்கையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’-ல் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில், தனது முன்னாள் கணவரான டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், தான் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அந்த கட்டுரையில் ஆம்பர் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் உலக அளவில் பேசுபொருளானது. பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் பட தொடரில் இருந்தும் டெப் நீக்கப்பட்டார்.  ஆனால், குடும்ப வன்முறை என தனது ஆம்பர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி டெப், தனது முன்னாள் மனைவி ஆம்பர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.
தனது பெயர், புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் செயல்படுவதாகவும் இதற்கு இழப்பீடாக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக்கோரி ஆம்பர் மீது ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். அதேவேளை, தனது முன்னாள் கணவரான ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், குடும்ப வன்முறைக்கு உள்ளானதாகவும் வழக்கு தொடர்ந்த ஆம்பர் தனக்கு நஷ்ட ஈடாக 776 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் வெர்ஜீனியா கோர்ட்டில் 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. பல்வேறு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த இறுதிகட்ட விசாரணை உலக அளவில் பேசுபொருளானது.

அதில், ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்பே வெளியானது. அதன்படி, ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியானதாக கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. ஜானியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும், அவதூறு பரப்பும் நோக்கத்தோடு பொய்யாக 2018-ம் ஆண்டு பிரபல பத்திரிக்கையில் ஆம்பர் கட்டுரை எழுதியுள்ளார் என கோர்ட்டு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை என நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம் அவதூறு பரப்பும் வகையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப்பிற்கு 80.31 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹிமுக்கு ஆயுள் தண்டனை

G SaravanaKumar

சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு

Halley Karthik

கல்லூரி பேருந்து பைக் மீது மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு

EZHILARASAN D