தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் இணைக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த முடிவை கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அளித்துள்ள விளக்கத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் கற்பனையானது என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் இணைக்கப்படாது என்றும் அவர் உறுதி படத் தெரிவித்துள்ளார்.







