கொரோனா தொற்று பரவல் மற்றும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனா பரவல் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்னால் முதுகலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ரத்து ஒத்திவைக்கப்பட்டன. மேலும் சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வரும் 28,29,30 தேதிகளில் நடக்கவிருந்த குரூப் -1 முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் ஜூன் 6ஆம் தேதி நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் அடங்கிய பதவிக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.







