முக்கியச் செய்திகள் விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3வது வெற்றி

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் விளையாடி திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிகபட்சமாக ஆர்.விவேக் 61 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக விக்கெட் கீப்பர் மணி பாரதி 37 ரன்கள் எடுத்தார். கேப்டன் அஸ்வின் 25 ரன்கள் எடுத்தார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர் சோனு யாதவ் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் கெளசிக் காந்தி 44 ரன்களும், என்.ஜெகதீசன் 31 ரன்களும் எடுத்தனர்.
சோனு யாதவ் 26 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக சேப்பாக் அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3ஆவது வெற்றியாகும்.


முன்னதாக, ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோவை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, விளையாடிய கோவை கிங்ஸ் அணி 15.2ஆவது ஓவரிலேயே 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜு 5 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார், சாய் சுதர்ஷன் ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் அரை சதம் பதிவு செய்தனர். கோவை அணிக்கும் இது 3ஆவது வெற்றியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்

ஆட்சியர் புகைப்படத்தை பயன்படுத்தி அதிகாரிகள் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

Dinesh A

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

Web Editor