சேப்பாக்கம் தொகுதியில் இருந்து மேயர் அல்லது துணை மேயர்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சூசகம்

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இருந்துதான் மேயரோ, துணை மேயரோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல்…

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இருந்துதான் மேயரோ, துணை மேயரோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் இருந்துதான் மேயாரோ, துணை மேயரோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறினார். யாரை தேர்ந்தெடுத்தாலும், அவர்களுக்கு துணையாக இருந்து தேர்தல் பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அனைவரும் பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாட வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.