முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாராசின் ஓபன் செஸ்-பிரக்ஞானந்தா சாம்பியன்!

பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

செர்பியாவில், பாராசின் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இநதத் தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’ உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் ஆனார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தார். கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவ், இந்தியாவின் முத்தையா தலா 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர். பின்னர், ‘டை பிரேக்கர் ஸ்கோர்’ அடிப்படையில் கஜகஸ்தான் வீரர் 3வது இடத்தை வென்றார். முத்தையாவுக்கு 4வது இடம் கிடைத்தது.

முன்னதாக, சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கௌஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரையும் இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா வென்றார்.

பிரக்ஞானந்தா, சென்னையில் வரும் 28ம் தேதி தொடங்கவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா ‘பி’ அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகிறது

G SaravanaKumar

’ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது’: பிராவோ

Halley Karthik

கொரோனா பாதிப்பு: முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்

Halley Karthik