தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால் சரியான தலைமை இருந்தால்தான் அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி மநீம வேட்பாளரை ஆதரித்து, கமல்ஹாசன் மேடவாக்கத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “ஊழல் இல்லாத ஆட்சி தரவேண்டும் என்றால் தலைமை சரியாக இருக்க வேண்டும். அதற்கான உத்தரவாதத்தைத் தாம் அளிப்பதாகத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமையும்” என அவர் கூறினார்.







