தமிழக சட்டப் பேரவை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பகல் ஒரு மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, மாலை 3.00 மணி முதல் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, ஜலகண்டபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி நகராட்சி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். தொடர்ந்து 16 மற்றும் 17-ந் தேதிகளில் 17 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்க உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்