மதுபான விற்பனைக்கு அனுமதி ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

மனிதனின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனைக்கு இன்னும் அனுமதி அளிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில்…

மனிதனின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனைக்கு இன்னும் அனுமதி அளிப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனிதனின் எதிர்ப்பு சக்தியை கொல்லக்கூடிய மதுபான விற்பனைக்கு இன்னும் அனுமதி அளிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கொரோனா தொற்றை பொருத்தவரை மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் சாடினர். மேலும், வழக்கு குறித்து மத்திய உள்துறை செயலர், தமிழக உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.