நவம்பர் ஒன்று முதல் பள்ளிகள் திறப்பு; தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து 9 முதல் 12 வரை…

தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தொடக்க பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்களிடையே எழுந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொடக்க பள்ளிகள் திறப்பு குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்டதன் அடிப்படையில்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.