தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 5,989 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 83,895 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 5,989 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகிவுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 83,895 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,26,816ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,886 ஆக உயிர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,952 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 37,673 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,382 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்தப்படியாக உள்ள செங்கல்பட்டில் 615 பேருக்கும் கோவையில் 501 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.