முக்கியச் செய்திகள் தமிழகம்

10% இட ஒதுக்கீடு அமல்படுத்த இயலாது: தமிழக அரசு திட்டவட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில கல்வி நிலையங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. மேலும் கடந்த ஆண்டு முதல் அனைத்து கல்வி நிலையங்களிலும் 10% இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுடன் காணொலி வாயிலாக மாநில மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நீட் தேர்விருந்து தமிழகத்திற்கு இந்த கல்வியாண்டில் விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்ப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 2021-2022 ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இயலாது என்று தமிழ அரசு சார்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது. மேலும் எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரும் என்று மத்திய அரசிடம் தமிழ அரசு அறிவுறுத்தி உள்ளது.

Advertisement:

Related posts

தபால் வாக்குப் பட்டியல் விவரங்கள்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

Ezhilarasan

1.32 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது: சத்ய பிரதா சாகு

தலைமைச் செயலகத்தில் புதுப்பொலிவுடன் தயாராகும் மு.க.ஸ்டாலின் அறை!

Karthick