கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து விவரங்கள் இதோ…
தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி முதல் வரும் 14-ம் தேதிவரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நோய்த் தொற்று அதிமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர்த்து, கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
எதற்கெல்லாம் அனுமதி
- மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி & மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
- காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.
- நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை தொடரும்.
- மீன் சந்தைகள் & இறைச்சிக் கூடங்களில் மொத்த விற்பனைக்கு, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி. மீன் சந்தைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் வகையில் திறந்தவெளியில் சந்தைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50% டோக்கன்களுக்கு மட்டுமே பத்திரப்பதிவு செய்ய அனுமதி

- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
- அலுவலகம் மற்றும் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள், இ- பதிவுடன் அனுமதிக்கப்படும்.
- மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திர பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழிலுக்கு இ-பதிவுடன் அனுமதி.
- பல்புகள் உள்ளிட்ட மின் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
- ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- மிதிவண்டி & இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.
- வாகன உதிரிப்பாக விற்பனை கடைகளோடு, வாகன விற்பனை நிலையங்களில் பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் செயல்பட அனுமதி.
- டாக்ஸி, ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இ-பதிவுடன் செயல்படலாம். வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர 3 பேரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேரும் செல்லலாம்.
- புத்தகம் & எழுதுபொருட்கள் விற்பனை கடைகளுக்கு அனுமதி. தனியார் பாதுகாப்பு சேவைகள் இ-பதிவுடன் இயங்கலாம்.
- நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ- பதிவு பெற்று பயணிக்கலாம்.
- கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 10 % பணியாளர்களுடன் இயங்கலாம்.
எதற்கெல்லாம் அனுமதி இல்லை?

- டாஸ்மாக், தேநீர், சலூன் மற்றும் அழகு நிலையங்களுக்கு அனுமதி இல்லை.
- 14-ம் தேதிவரை பேருந்து போக்குவரத்துக்குத் தடை நீட்டிப்பு.
- மெட்ரோ ரயில்களுக்கு அனுமதி மறுப்பு.







