முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் எவை எல்லாம் செயல்படலாம்? எதற்கெல்லாம் அனுமதி என்பதை இங்கே பார்க்கலாம்..

கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி & மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
  • காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.
  • மீன் சந்தைகள் & இறைச்சிக் கூடங்களில் மொத்த விற்பனைக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி.
  • மீன் சந்தைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் வகையில் திறந்தவெளியில் சந்தைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
  • சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50% டோக்கன்களுக்கு மட்டுமே பத்திரப்பதிவு செய்ய அனுமதி.
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
  • கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

Saravana

ஸ்டாலினால் 100 நாட்களில் கச்சத் தீவை மீட்டுத் தர முடியுமா? – ராஜன் செல்லப்பா

Niruban Chakkaaravarthi

மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Niruban Chakkaaravarthi