முக்கியச் செய்திகள் தமிழகம்

சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர், சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுத்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

செங்கல் சூளை வைத்திருப்போர் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. நீண்டநாட்களாக சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுத்து கொள்வதற்கு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும், மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று, மண் எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதேநேரத்தில், கிராமப்புற சாலைகளில் இருந்து 10 மீட்டர் வரையிலும், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே சாலை, ஆறுகள், நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரையிலும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்து மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தியாகிகள், படைப்பாளிகள், திராவிட இயக்க முன்னோடிகளுக்கு திரு உருவச்சிலை – அமைச்சர்

Halley karthi

சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை பழி வாங்க பெண் வேடமிட்ட சகோதரன்!

Jeba Arul Robinson

ஜாமீனில் வந்து பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்ற வன்கொடுமை வழக்கு குற்றவாளி!

Jeba Arul Robinson