தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிறந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவராக மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை டாக்டர்.எம்.ஜி.ஆர் இடம்பிடித்தவர் ஆவார்.…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி.ஆர் 105வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சிறந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவராக மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை டாக்டர்.எம்.ஜி.ஆர் இடம்பிடித்தவர் ஆவார். எண்ணற்ற எதிர்ப்புகள் வந்தாலும் தனது திரைபடங்களில் சமூக சிந்தனைகளை முன்வைத்து மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர். அரசியலிலும் அயராது உழைத்து அதிமுக தொடங்கிய 5 ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். மேலும், இவர் ஏழை மக்கள் முன்னேற்றமடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்றது. அப்போது அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில், எம்.ஜி.ஆர்.சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், ’எம்ஜிஆர் இருந்த பொற்காலத்தை மீண்டும் மலரச் செய்வோம்’ என வி.கே.சசிகலா உறுதி மொழி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.