தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். புதிய அமைச்சரவை பட்டியலை அவர் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் யார் என்ற பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் நாளை அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. முதலமைச்சரானதும் முதலாவதாக 3 திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







