மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது! – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அவர்களுக்கு வழங்க, 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அவர்களுக்கு வழங்க, 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் அணைக்கட்டில், தமிழக அரசு சார்பில் காளிங்கராயன் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேசி கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

மேலும், 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply