முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,804 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு
முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 85 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரத்து 804 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 92 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஆயிரத்து 917 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 37
ஆயிரத்து 632 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு
காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 579ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 209 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 167 பேருக்கும் சேலத்தில் 117 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 21 மாவட்டங்களில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. 20 ஆயிரத்து 225 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

போக்குவரத்து காவலரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபர் கைது!

Gayathri Venkatesan

தாய்லாந்து மீனவ சகோதரர்களுக்குச் சிக்கிய பலக்கோடி மதிப்பிலான அரியவகை முத்து!

Jayapriya

கடைகளில் ஊழியர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்

Saravana Kumar