டெல்லி வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன், எம்.பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின், மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார். இதற்காக, இன்று காலை 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அவருடன் அவருடன், அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் டெல்லி தனி விமானம் காலை 10 மணியளவில் வந்தடைந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று மாலை 5 மணியளவில், பிரதமர் மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேசவுள்ளார்.







