முக்கியச் செய்திகள் இந்தியா

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு : 7 பேர் உயிரிழப்பு!

நேபாள நாட்டில், மேலமாஞ்சி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மாயமாகியுள்ளனர்.

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள மேலமாஞ்சி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிந்துபாலாசோக் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் எழுந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம், கூட்டணிக்கு பலம் சேர்க்கும்- சி.டி.ரவி!

Jayapriya

’என் வீட்டுத் தோட்டத்தில்…’ நடிகர் சிவகார்த்திகேயனின் பசுமை தோட்டம்!

Gayathri Venkatesan

பனை மரத்திலிருந்து கள் இறக்க பாடுபடுவோம் – ராக்கெட் ராஜா வாக்குறுதி

Gayathri Venkatesan