தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை ஆலோசனை!

சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவையின் பதவி காலம் மே மாதம் 24ஆம்…

சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவையின் பதவி காலம் மே மாதம் 24ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணைய குழுவினர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் சட்டப் பேரவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், நாளை மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.