தமிழ்நாட்டில் நிதிநிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
16-வது சட்டப்பேரவையின் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “பெட்ரோல் டீசல் மீதான வரியில் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய தொகை ஒன்றிய அரசே வைத்துக்கொள்வதாகவும், பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பில் தமிழ்நாடு 17வது, 18வது இடத்தில் உள்ளது.
கடந்த 2006-2011-ம் ஆண்டு திமுக ஆட்சி காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தபோதும், தமிழகத்தில் மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை கலைஞர் குறைத்தார்.
தமிழ்நாட்டின் தற்போது நிதிநிலையின் படி வாட் வரியை குறைக்க முடியாது என்றும், மாநிலத்தின் நிதிநிலை சீரானதும் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என கூறினார்







