முக்கியச் செய்திகள் தமிழகம்

முதல்வர் படம் இடம் பெறாத கொரோனா நிவாரண தொகுப்பு பை!

கொரோனா தொகுப்பான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான பைகள் அச்சடிக்கப்பட்டு தாயார் நிலையில் உள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000 மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் தினமும் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரவு ஊரடங்கு குறிப்பிட்டக்காலத்திற்கான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த தொகுப்பில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது. இந்நிலையில் இந்தத் தொகுப்பு வழங்கப்படும் பைகள் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் இருக்கிறது. இந்த பையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படமோ அல்லது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் தமிழக அரசு முத்திரை மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜீன் 3ம் தேதி இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தொகுப்பில் வழங்கப்படும் பொருட்கள்

சர்க்கரை -500 கிராம், கோதுமை மாவு- 1 கிலோ. உப்பு- 1 கிலோ, ரவை- 1 கிலோ, உளுந்தம் பருப்பு- 500 கிராம், புளி- 250 கிராம், கடலை பருப்பு- 250 கிராம், டீ தூள்- 200 கிராம், கடுகு- 100 கிராம், சீரகம்- 100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய்த் தூள்- 100 கிராம், குளியல் சோப் (125 கிராம்)- ஒரு சோப்,
துணி சோப் (250 கிராம்) – ஒரு சோப்

Advertisement:

Related posts

மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்

Saravana Kumar

தடுப்பூசி குறித்து அதிமுக விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

தமிழகத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு!

Ezhilarasan