’ஏஜிஎஸ் ராம்பாபுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’

தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு கொரோனா தொற்று பாதித்து…

தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், தமாகா கட்சியின் முன்னாள் எம்.பி ஏஜிஎஸ் ராம்பாபு கொரோனா தொற்று பாதித்து மதுரையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் மதுரை மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான திரு. A.G.S. ராம்பாபு அவர்களின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும், வருத்தத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக ராம்பாபு ஆற்றிய ஏராளமான பணிகள் தான் இன்றைக்கு மதுரை தொகுதி பல துறைகளில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை அவர் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். மறைந்த ஜி.கே. மூப்பனார் அவர்களின் தலைமையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர் ஏஜிஎஸ் ராம்பாபு எனவும்,

பிறகு 1996-ல் ஜி.கே. மூப்பனார் தலைமையை ஏற்றும், 2014 ல் தனது தலைமையிலும் த.மா.கா.விற்கு வலு சேர்த்தவர் எனவும்  இவர் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர் எனவும் புகழாரம் சூட்டினார்.

இவரது மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கும், த.மா.கா கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், த.மா.கா வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் த.மா.கா சார்பில் அவர் தெரிவித்துக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.