கோவையில், இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக, திருப்பூர்
இந்து முன்னணி பிரமுகர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ்
ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது
தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக,
ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வாகன திருட்டு
தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திருப்பூரைச்
சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர், பாலகிருஷ்ணன்
மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, ராமநாதபுரம் போலீசார் நேற்று இரவு இருவரையும் திருப்பூரில் வைத்து
கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர
வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீசார் விசாரணையில் திருடப்பட்ட
வாகனங்களை அடமானம் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
—-கு. பாலமுருகன்







