திருப்பதி லட்டுக்கு வயது 308!

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பக்தர்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்லும் லட்டு பிரசாதம் திருப்பதி கோயிலில் 307 ஆண்டுகளை கடந்து இன்று முதல் 308வது ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பக்தர்கள்…

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பக்தர்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்லும் லட்டு பிரசாதம் திருப்பதி கோயிலில் 307 ஆண்டுகளை கடந்து இன்று முதல் 308வது ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பக்தர்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்லும் பிரசாதம் திருப்பதி லட்டு ஆகும். 300 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் பூந்திக்கு பதிலாக லட்டு பிரசாதம் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டு இப்போது வரை பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. எனவே இந்தியாவில் யாரும் திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டு உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ இயலாது.

திருப்பதி லட்டு:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக தேவஸ்தானத்தில் ஒரு தனி துறையே செயல்படுகிறது. அந்த துறை பக்தர்களுக்கு தடங்கல் இல்லாமல் பிரசாதம் கிடைக்கும் வகையில் தினமும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் லட்டுக்களை தயார் செய்கிறது. ஏழுமலையான் கோயிலில் மூன்று வகையான லட்டுக்கள் தயார் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுண்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் எடையுள்ள லட்டு. மற்றொன்று சுமார் 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு. மூன்றாவது லட்டு புரோக்தம் லட்டு என்று அழைக்கப்படும். இந்த லட்டு சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்காக தயார் செய்யப்படுகிறது.

லட்டு பார்முலா:

இதனை லட்டு திட்டம் என்று தேவஸ்தான நிர்வாகத்தில் கூறுவார்கள். 175 கிராம் எடையுடைய 5100 லட்டுக்களை தயார் செய்ய 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ சுத்தமான நெய், 30 கிலோ முந்திரி பருப்பு, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.