கொரோனா பரவலால் திருப்பதியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

கொரோனா பரவல் அதிகரிப்பால் திருப்பதியில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு…

கொரோனா பரவல் அதிகரிப்பால் திருப்பதியில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதே நேரம் திருப்பதி தரிசனத்திற்காக தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் நாள்தோறும் சென்றுவருகிறார்கள். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆன்லைன் தரிசன டோக்கன், நேரடி டோக்கன்களின் எண்ணிக்கை 22,000 லிருந்து 15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொண்டு தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் திருப்பதி பயணத்தை தவிர்க்கவும் எனவும், கோயிலில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளை சுத்தம் செய்வது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.