நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது, கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் மாநிலங்களவையில் இன்று நிறைவு பெற்றது. இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவருக்கான பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனையொட்டி மாநிலங்களவையில் வெங்கைய்யா நாயுடுவுக்கு வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் திமுக சார்பில் எம்பி திருச்சி சிவா பேசியதாவது, “நாடாளுமன்றத்தில் உரையாடுகின்றவர்கள் அவரவரின் தாய் மொழிகளில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். பிராந்திய மொழிகளுக்காக தாங்கள் தொடர்ந்து வாதிட்டிருக்கிறீர்கள் என்றும் கூறினார்.
மேலும் வெங்கையா நாயுடு உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தினார் என்றும், அவர் எப்போதும் உறுப்பினர்களின் சிறிய கவலைகளுக்கும் கூட செவிமடுத்தார் என்றும் கூறினார். இந்த சபைக்கு நீங்கள் அளித்த பங்களிப்பை நான் மறக்க மாட்டேன், என்றும் அவர் பேசினார். நான் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அது என்னவென்றால் நீங்கள் உங்களது சுயசரிதையை எழுத வேண்டும். கடைசியாக, ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி கொள்கிறேன், நாங்கள் உங்களை இழக்கிறோம், ஐயா என்று உருக்கமுடன் பேசியிருந்தார்.