ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு சட்டம் கொண்டுவந்து தடை செய்தது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் திமுகவுடன்
கைகோர்த்து உள்ளனர் என்று தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னிமலை வழியாக ஈரோடு மாவட்டம்
பெருந்துறைக்கு வந்தார் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் முன்பு எடப்பாடி
பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே சி கருப்பண்ணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு சட்டம் கொண்டுவந்து தடை செய்தது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் திமுகவுடன்
கைகோர்த்து உள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கருத்து கேட்கபடும் என்று திமுக அரசு கூறுவது
வேடிக்கையாக உள்ளது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மக்கள்
கல்வி உள்ளிட்ட அனைத்திலும் மேம்பட தனி கவனம் செலுத்தபடும்.
அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அளித்து வந்தது.
தற்போது திமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி வருகிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை இயற்றி தடை செய்தது. சரியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டது.
சரியான ஆதாரத்தை திமுக அரசு அளிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்ட ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து உள்ளனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 20,000 கோடி பணம் வருகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய திமுக அரசு கருத்து கேட்கும் கூட்டம் நடத்துவதாக
கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களின் கல்வி உள்ளிட்ட அனைத்திலும் மேம்பட தனி கவனம் செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.