இந்தியர்கள் நிலவில் கால் பதித்து நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
இஸ்ரோவின் இந்த சாதனை குறித்து நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “செயற்கைகோளின் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது தொடங்கி நிலவில் தரையிறங்கியது வரை என்ன ஒரு நெடும் பயணம்! இஸ்ரோ குழு இந்தியாவையே பெருமைபடுத்தியுள்ளது. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். நிலவில் இந்தியர்கள் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என பதிவிட்டுள்ளார்.







