இயக்குநர் ஷங்கர் படைப்பில், விக்ரம் நடித்து 2005ம் ஆண்டு வெளியான ”அந்நியன்” திரைப்படம் 4k தரத்தில் மெறுகேற்றப்பட்டு மறுவெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.
நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன். இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் பின்னர், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது. பிரான்சில் வெளியான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் அந்நியன் படத்திற்கு உண்டு.விக்ரமிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்த படங்களில் ஷங்கர் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த அந்நியன், ஐ போன்ற படங்கள் முக்கியமானவை. அந்த வகையில் அவரது அந்நியன் படம் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. மூன்று தோற்றங்களில் நடித்திருந்த விக்ரம் சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இத்திரைப்படத்தை 4கே தரத்தில் தொழில்நுட்ப மெறுகேற்றல் செய்து மறுவெளியீடு செய்ய இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீபாவளிக்குப் பின் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் காலத்தில் மறுவெளியீடு செய்யப்படும் படங்களை கொண்டாடுவது ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் பட்சத்தில், இந்த படத்தின் மறுவெளியீடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.