டிக்கா உத்சவ் எனப்படும் தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் நாடு முழுவதும் 27 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று இரண்டாம் அலையை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன்படி நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் பல இடங்களில் டிக்கா உத்சவ் நிகழ்வுகள் நடைபெற்றன.
குறிப்பாக டெல்லியில் பாந்த்ரா சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் கோவிட்19 தடுப்பூசி திருவிழா தொடங்கியது. ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக காத்திருந்தனர். பரா ஹிந்து ராவ் மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டன. டெல்லி வாசிகள் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதே போல உத்தரபிரதேச மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசி திருவிழா தீவிரமாக நடைபெற்றது. பான்ஜல் என்ற இடத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
கடந்த 85 நாட்களில் இந்தியா முழுவதும் 10 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி விழா நடைபெறுவதால் வழக்கத்தை விட அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக ஜனவரி 16ஆம் தேதி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், பிப்ரவரி 2 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மூன்றாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இப்போது நான்காவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
Advertisement: