முக்கியச் செய்திகள் விளையாட்டு

கான்பூர் டெஸ்ட் : வெற்றிக்கு இந்தியா, டிராவுக்கு நியூசி. போராட்டம்

நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்குப் போராடி வருகிறது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கான்பூரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் சேர்த்தது அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து இந்திய அணி 283 ரன்கள் முன்னிலை வகித்தது. 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் யங் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

கடைசி நாளான இன்று காலை ஆட்டம் மீண்டும் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் டாம் லாதம்- சோமர்விலே களத்தில் நிலையாக நின்றனர். அவர்களை பிரிக்க இந்திய வீரர்கள் கடுமையான போராடினர். பின்னர் உமேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், சோமர்விலே. அவர் 36 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் வந்தார். இதற்கிடையே அரை சதத்தை பூர்த்தி செய்த டாம் லாதத்தை அஸ்வின் அசத்தலாக போல்டாக்கினார். அவர் 52 ரன்கள் எடுத்திருந்தார். 56 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. வெற்றிக்காக இந்திய அணியும் டிராவுக்காக நியூசிலாந்து அணியும் போராடி வருகின்றன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொடரை வெல்லப்போவது யார்? – இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

G SaravanaKumar

டீசல் விலை குறைப்பு மனநிறைவைத் தரவில்லை-லாரி உரிமையாளர்கள்

EZHILARASAN D

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

G SaravanaKumar