அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி : தீவிர பயிற்சியில் கன்னியாகுமரியின் இரும்பு மனிதன்..!

கன்னியாகுமரி சேர்ந்த இரும்பு மனிதன் கண்ணன், ஸ்பெயினில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளதை அடுத்து தீவிர பயிற்சியில்  ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…

கன்னியாகுமரி சேர்ந்த இரும்பு மனிதன் கண்ணன், ஸ்பெயினில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளதை அடுத்து தீவிர பயிற்சியில்  ஈடுபட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விலையை சேர்ந்தவர் இரும்பு மனிதன் கண்ணன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் சர்வதேச அளவிலான இரும்புமனிதன் போட்டியில்  கலந்து கொண்டு  வெள்ளிபதக்கம் பெற்றார்.

2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி  வரும் அக்டோபர் மாதம் 13,14,15 தேதிகளில் ஸ்பெயினில் நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள  கண்ணன் தேர்வாகி உள்ள நிலையில், நாகர்கோவில் அருகேயுள்ள மணக்குடி பாலத்தில் 210 கிலோ எடை கொண்ட கிரைன் டயரை 30 மீட்டர் வரை புரட்டி போட்டு பயிற்சியில் ஈடுபட்டார்.

சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.