வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைவு – மீனவர்கள் கவலை!

திருவள்ளுவர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சூரை, மற்றும் கவலை  மீன்களின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.  திருவள்ளுவர் மாவட்டம் பழவேற்காடு கடல் பகுதியில்  30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.…

திருவள்ளுவர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சூரை, மற்றும் கவலை  மீன்களின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. 

திருவள்ளுவர் மாவட்டம் பழவேற்காடு கடல் பகுதியில்  30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதை அடுத்து  மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்று கரை திரும்பி நிலையில் மீனவர்களின் வலையில் சூரை மற்றும் கவலை மீன்கள் டன் கணக்கில் கிடைத்துள்ளன.

இந்நிலையில் மீன்களின் வரத்து அதிகரித்ததால், மீன்களின் விலை குறைந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து கேரள மீன் வியாபாரிகள் ஏற்றுமதிக்காக  மீன்களை பெற்று ஐஸ் கட்டிகள் மூலம் பதப்படுத்தி  வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

—–கோ. சிவசங்கரன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.