ஆப்கானிஸ்தானில் காபூலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நோக் கத்தில் விமானத்தில் டயர் பகுதியில் ஏறிய 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின் லேடனை பழிவாங்குவதற்காக ஆப்கானுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேற தொடங்கிவிட்டது. இதையடுத்து ஆப்கானிஸ் தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான், தலைநகர் காபூலை கைப்பற்றியது.
இதனால், அந்நாட்டின் அதிபர் தஜிகிஸ்தானுக்கு தப்பினார். அவருடன் பல அதிகாரிகள், மற்றும் எம்.பிக்கள் சிலரும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தலிபான்கள், காபூலை கைப்பற்றியதை அடுத்து உள்ளூர் அரசு அதிகாரிகளும் பொது மக்க ளும் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல விமான நிலையங்களில் குவிந்துள்ளனர். காபூல் மக்கள் உயிருக்கு பயந்து பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்துள்ளது.
இந்நிலையில், விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, காபூல் சர்வதேச விமான நிலையத்துக்குள் வேகமாக நுழைந்த மக்கள், எப்படியாவது அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நோக்கில் பேருந்து களில் முண்டியடித்து ஏறுவது போல விமானத்தின் றெக்கை மற்றும் டயர் பகுதிகளில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
விமானம் புறப்படத் தொடங்கியது, டயர் பகுதிகளில் இருந்த சிலர் கீழே விழுந்து உயிரிழந்த னர். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.








